‘டாலஸ் தமிழ் மன்றம்’ தீபாவளி விழா.
டல்லாஸ் மாநகரில் இந்த மாதம் அக்டோபர் 21ஆம் தேதி ‘டாலஸ் தமிழ் மன்றம்’ தீபாவளி விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி ‘ஹெரிடேஜ் மேல்நிலை பள்ளி’ யில் 6.30 மணி மாலை மணியளவில் தொடங்கியது.
வந்திருந்த அணைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை வரவேற்புரையுடன் டாலஸ் தமிழ் மன்ற செயலாளர் திரு.முனிராஜ் ஜனகராஜ், தொடங்கி , இந்த விழாவை தொகுத்து வழங்க வந்த திருமதி. ஹேமா மோகன் அவர்களை அறிமுகப் படுத்தினார்.
இவ் தீபாவளியில் நடந்த நிகழ்ச்சிகள் பரதநாட்யம், சிறுவர் பெரியர்வர்கள் மற்றும் பட்டிமன்றம். இவற்றில் பங்கேற்க வந்திருந்த நடன பள்ளிகள் நர்த்தன, ராகமாயுரி,ஷரிஸ்த்தி, ஈஸ்வர் நாட்யல்ய மற்றும் அவ்வை தமிழ் பள்ளி மாணவர்கள் சிறப்பாக நடனமாடினார். நடன நிகழ்ச்சியில் திருப்புகழ் பாடலுக்கு மயிலாட்டம் மற்றும் பல நடனங்கள் அனைவரையும் கவர்ந்தது.
டாலஸ் தமிழ் மன்றம் தலைவர் திரு. ஸ்ரீனிவாஸ் தாமோதரன் , கடந்த இரண்டு ஆண்டுகளின் பணிகளை ஒவவொன்றாக எடுத்துரைத்தார். அவற்றில் தமிழ்நாட்டின் கொடைக்கானல் Roratyயுடன் இணைந்து ‘கழிவறைகள் சீரமைப்புக்கு நீதி திரட்டியவை, இங்குள்ள நூலகங்களில் தமிழ்ப்புத்தகம் நன்குடையாக வழங்கியது, படகு போட்டிகிள் பங்கேற்றது,ஆர்வி புயலுக்கு நீதி திரட்டியது இன்னும் பல சமூக தொண்டினைப் பற்றி பேசினார்..
இவ்விழாவின் முக்கிய நிகழிச்சியான சிறப்பு பட்டிமன்றம் ‘ டல்லாஸ் மாநகரில் முதல் முறையாக இங்குள்ள பேச்சாளர்களை அழைத்து நடுவர் திரு.இராம்கி இராமக்ரிஷ்ணன் பங்கேற்று சிறப்பாக நடைபெற்றது. பட்டிமன்றதின் தலைப்பு ‘இன்றைய தமிழ்ப் திரைப்படங்கள்’ சமுதாயத்தை வழிநடாத்துகிறதா ? சீரழிகின்றதா ?, இந்நிகழ்ச்சி நகைச்சுவையுடன் பல தமிழ் படங்களை கலந்து ஆலோசித்தனர்.
டாலஸ் தமிழ் மன்றம், மூன்றாம் ஆண்டை நோக்கி செல்லும் வேளையில் இவ்விழாவில் எழுநூறுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் தீபாவளி இனிதே முடிந்தது.